

திண்டுக்கல் மாலைப்பட்டியை சேர்ந்த ஜோசப் மகன் ஜோஸ்வா (வயது 23). ஓட்டல் ஊழியர். நேற்று முன்தினம் இரவு இவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த ஜோஸ்வா, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது பணியில் இருந்த டாக்டரிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில், திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை கைது செய்தனர்.