அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் பலி
Published on

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.

திருவண்ணாமலை அடுத்த மதுராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரபூபதி (வயது 35). இவர் காஞ்சியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை -காஞ்சி ரோட்டில் உள்ள காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று உள்ளது. இதில் படுகாயம் அடைந்த மகேந்திரபூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com