மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் பலி

கிரைண்டரில் மாவு அரைத்த போது மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் பலியானார்.
மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் பலி
Published on

பெரம்பலூர் அருகே குரும்பலூர் வடக்கு தெரு அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் ஓட்டலில் சேகர் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சேகர் தூக்கி வீசப்பட்டார். இதனைக்கண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com