உணவு வாங்க வந்த சிறுவனிடம் பாலியல் சீண்டல் - ஓட்டல் உரிமையாளர் கைது

ஓட்டல் உரிமையாளர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு வாங்க வந்த சிறுவனிடம் பாலியல் சீண்டல் - ஓட்டல் உரிமையாளர் கைது
Published on: 

கன்னியாகுமரி,

உணவு வாங்க வந்த சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

13 வயது சிறுவன்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (52 வயது). இவர் கீரிப்பாறை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த ஓட்டலில் 13 வயது சிறுவன் உணவு வாங்க சென்றான். அப்போது அங்கு ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.

பாலியல் சீண்டல்

இதை சாதகமாக பயன்படுத்திய ரமேஷ்குமார் சிறுவனை கட்டாயப்படுத்தி ஓட்டலில் மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். தொடர்ந்து சிறுவன் அங்கிருந்து வீட்டுக்கு சோர்வுடன் சென்றான். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த பெற்றோர் அவனிடம் கேட்டபோது ஓட்டல் உரிமையாளர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை தெரிவித்தான்.

ஓட்டல் உரிமையாளர் கைது

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X