ஓட்டல், டீக்கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஓட்டல், டீக்கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தல்
Published on

சென்னை,

கொரோனா பெருந்தொற்று பேரிடரால் மிகவும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் தற்போது மீண்டெழுந்து வரும் நிலையில், கடைகளுக்கு சீல் வைப்பு, அடிக்கடி அபராதம் விதித்தல் போன்றவை அறவே நிறுத்தப்பட வேண்டும். வணிகர்கள் மீதான பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட வழக்குகள் முழுமையாக திரும்பப்பெற வேண்டும். அதிகபட்சமான தண்டனைகள், அபராதங்கள், வெகுவாக குறைக்கப்பட வேண்டும். அனைத்து உணவகங்கள், டீக்கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளை இதர வணிக நிறுவனங்களுக்கு இணையாக காலநீட்டிப்பு செய்து, திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி போன்றவற்றை குறைந்தது 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் வணிகர்களையும் முன்கள பணியாளர்களைப்போல முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com