5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளிக்கு 7ஆண்டு சிறை

பாலியல் வழக்கு மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளிக்கு 7ஆண்டு சிறை
Published on

மதுரை,

மதுரையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). ஓட்டல் தொழிலாளி. இவர் 2022-ம் ஆண்டில் தனது வீட்டின் அருகே விளையாடிய 5 வயது சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் அழுதபடி கூறினார். அதன்பேரில் அவர்கள் இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு வக்கீல் ஜான்சி ஆஜரானார்.

விசாரணை முடிவில், பழனிசாமி மீதான குற்றசாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரவேல் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 2 லட்சம் இழப்பீடாக வழங்கும்படி அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com