வீட்டை உடைத்து சங்கிலி- செல்போன் திருட்டு

தூத்துக்குடியில் வீட்டை உடைத்து சங்கிலி, செல்போனை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
வீட்டை உடைத்து சங்கிலி- செல்போன் திருட்டு
Published on

தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள கலைஞர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி அன்னக்கிளி (வயது 58). இவர் மாதாநகர் 5-வது தெருவில் வீட்டுடன் சேர்ந்து மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக குடியிருந்து வருகின்றனர். அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரது மகளின் கணவர் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த துணிகள் எடுத்து வந்து ஆஸ்பத்திரியில் கொடுத்துள்ளார். அதன்பிறகு நேற்று முன்தினம் அவரது மருமகன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்அறையில் உள்ள பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த சுமார் 3 பவுன் தங்க சங்கிலி, பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அன்னக்கிளி, தாளமுத்து நகர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com