வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை - ரூ.3 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை - ரூ.3 லட்சம் திருட்டு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே விளார்ரோடு காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் திப்பு சுல் தான் (வயது 31). இவர் தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரு டைய மனைவி ஜெயினப்பேகம் (29). இவர் காயிதேமில்லத் நகரில் தனது 7 வயது குழந்தை மற்றும் தாய்- தந்தையுமன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தஞ்சை கல்லுக்குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தொழுகைக்காக ஜெயினப்பேகம் குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் நீண்ட நேரமானதால் அங்கேயே தங்கியிருந்த அவர் நேற்று காலை காயிதேமில்லத் நகரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந் தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கு ஜெயினப்பேகம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர் களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com