கோவில் மேளக்காரர் வீட்டில் தீ

தலைவாசல் அருகே வடசென்னிமலை கோவில் அடிவாரத்தில் கோவில் மேளக்காரர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவில் மேளக்காரர் வீட்டில் தீ
Published on

தலைவாசல்

தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் ராமதாஸ் என்பவர் வசித்து வருகிறார். மேளம் அடிக்கும் தொழில் செய்து வரும் இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்படி இருந்தும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், பிரிட்ஜ் ஆகியவை எரிந்து சேதமானது. தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com