மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு - அரசாணை வெளியீடு

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு - அரசாணை வெளியீடு
Published on

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்குட்பட்ட மாஞ்சோலை பி.பி.டி.சி. தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான அனைத்து உதவிகளும் பணியிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் வீடுகள், வாழ்வாதாரத்திற்கான உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்ய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ரூ.11.54 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு பயனாளிகள் தொகையான சுமார் ரூ.3 லட்சத்தை அரசே செலுத்த நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com