மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டாவை சரவணன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா
Published on

கலசபாக்கம்

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டாவை சரவணன் எம்.எல்.ஏ.வழங்கினார்.

ஜவ்வாத மலை தாலுக்கா அலுவலகத்தில் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கும் விழா நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.சரவணன் கலந்து கொண்டு 39 மலைவாழ் மக்களுக்கு வனத்துறை சார்பில் பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,' 'எனது தொகுதிக்குட்பட்டு ஜவ்வாதுமலை யூனியனின் 5 பஞ்சாயத்துகள் வருகிறது.

இதில் கடந்த 20 ஆண்டுகளாக தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வேண்டி மலைவாழ் மக்கள் எவ்வளவோ போராடி வந்தும் அவர்களுக்கு பட்டா கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் நான் வாரத்திற்கு இரண்டு முறை மலை கிராமத்துக்கு வந்து மக்களுடன் சேர்ந்து பழகி யார் யாருக்கு என்னென்ன பிரச்சினை என்பதை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றேன்.

கடந்த 6 மாதத்தில் மட்டும் என்னிடம் 1,455 மனுக்கள் பட்டா வேண்டி வரப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தையும் அமைச்சர் எ.வ.வேலுவிடம் வழங்கி உடனடியாக மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

அதன் அடிப்படையில் கோடை விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 950 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கினார். தற்போது மேலும் 39 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படுகிறது. இதுவரை என்னிடம் மனு கொடுத்த அனைவருக்கும் பட்டா பெற்று கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் துணை கலெக்டர் (திட்ட அலுவலர்) செந்தில்குமார், தாசில்தார் மனோகரன், ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி செல்வம் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com