அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ரத்து

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ரத்து
Published on

சென்னை,

ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர இதில் தொடர்புடைய மற்றவர்கள் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com