மக்கள் பணியில் பங்கு கேட்டால் எப்படி சதியாகும்? காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி

திமுக - காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க சதி என மு.க.ஸ்டாலின் கூறியிருந்ததற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எதிர்வினை ஆற்றி உள்ளார்.
மக்கள் பணியில் பங்கு கேட்டால் எப்படி சதியாகும்? காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி
Published on

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது” என பேசியிருந்தார். அதே சமயம், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் திமுக அமைச்சரான ராஜ கண்ணப்பன் ,அவர்கள் வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும். கூட்டணியை நம்பி கட்சி நடத்த முடியாது என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க சதி என மு.க.ஸ்டாலின் கூறியிருந்ததற்கு காங்கிரஸ் எம்.பி. எதிர்வினை ஆற்றி உள்ளார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிராகரித்த சூழலில் காங்கிரஸ் எம்.பி. பதிவிட்டுள்ளது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com