பிரதமர், முதல்-அமைச்சர் வந்தால் இரவோடு இரவாக சாலைகளை புதுப்பிப்பது எப்படி? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கோர்ட்டு உத்தரவையும் அதிகாரிகள் நிறைவேற்றுவது இல்லை கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
பிரதமர், முதல்-அமைச்சர் வந்தால் இரவோடு இரவாக சாலைகளை புதுப்பிப்பது எப்படி? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
Published on: 

மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ், சாலைப்பணிகளில் விதிமீறல் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சாலைகள் அமைப்பதற்கு என விதிமுறைகளும், ஐகோர்ட்டின் உத்தரவுகளும் உள்ளன. அந்த விதிமுறையை கடைபிடிப்பதே இல்லை. கோர்ட்டு உத்தரவையும் அதிகாரிகள் நிறைவேற்றுவது இல்லை. அதிக கமிஷன் கிடைப்பதில் சாலை அமைக்கும் டெண்டர்கள்தான் முதல் இடத்தை பிடிக்கின்றன என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், பிரதமர், முதல்-அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகிறார்கள் என்றால் அந்த பகுதி யில் இரவோடு இரவாக சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன. அதுஎப்படி நடக்கிறது என்றனர். விசாரணை முடிவில், சாலைப்பணி தொடர்பாக காண்டிராக்டர், மாநகராட்சி அதிகாரி, மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நேரில் ஆஜராகி, சாலை டெண்டர் விவரங்கள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தர விட்டனர்.

X