

மதுரை,
தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. டெட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தானாக முன்வந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இதனை வழக்காக எடுத்து கொண்டு விசாரணை மேற்கொண்டது.
இதுபற்றிய விசாரணையில், தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டனர் என கூறி எத்தனை பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுபற்றி எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கேள்வி எழுப்பிய அவர்கள், பணம் கொடுத்து பணியில் சேர்பவர்கள் நேர்மையாக எப்படி பணி செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
#judge #HC bench