அரசு பஸ் எல்.இ.டி. திரையில் தவெக பெயர் வந்தது எப்படி? - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

இது தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அரசு பஸ் எல்.இ.டி. திரையில் தவெக பெயர் வந்தது எப்படி? - சைபர் கிரைம் போலீசார் விசாரணை
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பஸ் கடந்த 2 நாட்களுக்கு முன் திருச்சியில் இருந்து கம்பத்திற்கு சென்றது.

அந்த பஸ்சில் வழித்தட ஊர் பெயர்களை காட்டும் எல்.இ.டி. திரையில் கம்பம் என்பதற்கு பதிலாக 'தமிழக வெற்றிக்கழகம்' என ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வந்துள்ளன. இதனை பார்த்து அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந் தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அரசு பஸ்சின் வழித்தட அறிவிப்பு எல்.இ.டி. திரையில் அரசியல் கட்சியின் பெயர் எப்படி வந்தது? இதற்கு காரணம் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com