தமிழ்நாட்டில் இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகள் எத்தனை...?

2 வார காலத்திற்குள் மதுக்கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகள் எத்தனை...?
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், கடந்த 12-ந் தேதி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுதான் அது.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 717 மதுக்கடைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கடைகளை 2 வார காலத்திற்குள் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று வரை 513 மதுக்கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இன்னும் 204 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். இந்தக் கடைகளும் இந்த வார இறுதிக்குள் மூடப்படும் என டாஸ்மாக் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com