அரசு வால்வோ ஏ.சி. பேருந்துகளின் வழித்தடங்கள் மற்றும் கட்டண விவரம்....

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு வால்வோ ஏ.சி. பேருந்துகளின் வழித்தடங்கள் மற்றும் கட்டண விவரம்....
Published on

சென்னை,

அரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நடவடிக்கையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025-2026 நிதியாண்டுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளது. இவற்றில் 110 பேருந்துகள் குளிர்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை.

மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள். பெங்களூரில் இந்தப் பேருந்துகளை கட்டமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் 20 அதிநவீன சொகுசு பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு Multi Axle கொண்ட 20 அதி நவீன வால்வோ குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை சென்னை தீவுத்திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்செந்தூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த வால்வோ ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை - நாகர்கோவில், சென்னை - திருநெல்வேலி, சென்னை - திருச்செந்தூர் , சென்னை-கோவை , சென்னை - திருப்பூர், சென்னை - மதுரை, கோவை - பெங்களூ , சென்னை - பெங்களூரூ, சென்னை - சேலம், திருச்சி - சென்னை ஆகிய வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, இந்த பேருந்துகளுக்கான கட்டண விவரம் குறித்து பார்ப்போம்,

*சென்னை - நாகர்கோவில் ரூ.1,215

*சென்னை - திருச்செந்தூர் ரூ.1,115

*சென்னை - திருநெல்வேலி ரூ.1,080

*சென்னை - கோவை ரூ.880

*சென்னை - திருப்பூர் ரூ.800

*சென்னை - மதுரை ரூ.790

*கோவை - பெங்களூ ரூ.770

*சென்னை - பெங்களூரூ ரூ.735

*சென்னை - சேலம் ரூ.575

*சென்னை - திருச்சி ரூ.565. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com