

சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம் வருமாறு:-
* அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் - ரூ.1,55,977 கோடி
* மகளிர் விடியல் பயண திட்டம் - ரூ.4,000 கோடி
* அரசு பேருந்து டீசல் மானியத்துக்கு நிதி - ரூ.1,857 கோடி
* மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் - ரூ.1,782 கோடி
* உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் - ரூ.17,088 கோடி
* கூட்டு குடிநீர் திட்ட மேம்பாடு - ரூ.809 கோடி
* நதிக்கரை மேம்பாடு - ரூ.374 கோடி
* அனைத்து சமூக நலத்திட்டங்களுக்கான நிதி - ரூ.5,473 கோடி
* முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் நடத்த நிதி - ரூ.47 கோடி
* முதல்-அமைச்சரின் இளைஞர் விளையாட்டு திருவிழா - ரூ.43 கோடி
* முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் - ரூ.8,911 கோடி
* முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத்தொகை - ரூ.101 கோடி
* செமி கண்டக்டர் இயக்க திட்டம் - ரூ.500 கோடி
* கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - ரூ.6,000 கோடி
* காலை உணவுத் திட்டம் - ரூ.1,884 கோடி
* தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் - ரூ.214 கோடி
* விலையில்லா வேட்டி - சேலை திட்டம் - ரூ.612 கோடி
* பாம்பனில் தூண்டில் வளைவு - ரூ.58 கோடி
* அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் - ரூ.11,000 கோடி
* தீயணைப்பு வீரர்கள் பயிற்சி மையம் - ரூ.22 கோடி
* வறட்சி தடுப்பு நடவடிக்கைக்கு நிதி - ரூ.110 கோடி
* மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைக்க நிதி - ரூ.50 கோடி