உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

உளுந்து பயிரில் காணப்படும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
Published on

உளுந்து பயிரில் காணப்படும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் தேமல் நோய்

சிவகங்கை, விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று வேளாண்மை உதவி இயக்குனர் மதுரை சாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்த உளுந்து பயிரில் சில இடங்களில் மஞ்சள் தேமல் நோய் காணப்படுகிறது. இந்த நோய் தாக்கிய பயிர்களில் இளம் இலைகளில் மஞ்சள் நிறபுள்ளிகள் ஆரம்பத்தில் தோன்றும். புதிதாக தோன்றும் இலைகளில் மஞ்சள் மற்றும் பச்சைதிட்டுக்கள் காணப்படும்.

கட்டுப்படுத்துவது எப்படி?

புள்ளிகளின் அளவு அதிகமாகி முடிவில் இலை முழுவதும் மஞ்சளாக மாறிவிடும்.மேலும் பயிர் வளர்ச்சி குறைந்து பூக்கள் மிக மிக குறைவாக இருக்கும். காய் எண்ணிக்கை குறைந்து மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். இதை கட்டுபடுத்த கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

கோடைபட்டத்தில் நோய் எதிர்ப்புசக்தியுள்ள உம்பன் -8,உம்பன்-10 ரகங்களை சாகுபடிசெய்யவேண்டும். மஞ்சள் தேமல் பாதித்த பயிர்களை ஆரம்பத்திலேயே பறித்து அழிக்க வேண்டும். வரப்புபயிராக சோளம் 7 வரிசையில் விதைக்கவும். அத்துடன் இமிடோ குளோபிரிட் 5 மி.லி.கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com