வாசனை திரவியங்கள் தயாரிப்பது எப்படி? - சென்னையில் 2 நாட்கள் பயிற்சி

18 வயதுக்கு மேற்பட்டோர் குறைந்தபட்ச கல்வித் தகுதியான 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாசனை திரவியங்கள் தயாரிப்பது எப்படி?
Published on: 

சென்னை,

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 2 நாட்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் வாசனைத் திரவியங்கள் தயாரிப்புப் பயிற்சி வரும் 04.11.2026 முதல் 05.11.2026 - ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

வாசனைத் திரவியத் தயாரிப்பு பயிற்சி

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இப்பயிற்சியில் நறுமணம், வாசனைத் திரவியத் தயாரிப்பு மற்றும் நடைமுறை உருவாக்கம், நறுமணத் தொழில் மற்றும் வாசனைத் திரவிய மதிப்புக்கான அறிமுகம், இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்கள். EDP, EDT. தொழில்முறை வாசனைத் திரவிய வல்லுநர்கள் நறுமணத்தை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள், புலன்சார் சொற்களஞ்சியம், மற்றும் உலர்ந்தபின் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்தல்.

நறுமணப் பொருட்கள்/அக்கார்டுகளை அடையாளம் கண்டு ஒப்பிடுதல், நறுமண எண்ணெய்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், நறுமண வேதிப்பொருட்கள், ஆல்கஹால், மற்றும் பிற உருவாக்கக் கூறுகள். அளவிடுதல், சதவீதக் கணக்கீடு, நீர்த்தல் மற்றும் கலத்தல். ஒரு எளிய நறுமண அக்கார்டை உருவாக்குதல். ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு தனிப்பட்ட வாசனைத் திரவியத்தை உருவாக்கி, விற்பனை விலை, மொத்த இலாப வரம்பு மற்றும் அடிப்படை விலை நிர்ணய உத்தி. நடைமுறைக் கணக்கீட்டுப் பயிற்சி. வர்த்தக முத்திரை மற்றும் தயாரிப்பு மேம்பாடு மற்றும் தயாரிப்பு நிலைப்படுத்தல். பேக்கேஜிங் மற்றும் தொகுப்புகள் ஆகியன கற்றுத்தரப்படும்.

விண்ணப்பிக்கலாம்

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்டோர் குறைந்தபட்ச கல்வித் தகுதியான 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது, தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். (முன்வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்) இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032.

8668102600/7806918309 www.editn.in

முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com