வீடுகளில் தீவிபத்து ஏற்பட்டால் தடுப்பது எப்படி? - பொதுமக்களுக்கு தீயணைப்பு நிலையங்களில் 2 நாள் பயிற்சி

வீடுகளில் சமையல் செய்யும் போது ஏற்படும் தீ விபத்து மற்றும் அலுவலகங்களில் ஏற்படும் தீவிபத்துகளை எவ்வாறு அணைப்பது தொடர்பான வகுப்புகள் நடைபெறுகிறது.
தீயணைப்பு நிலையங்கள்
Published on

சென்னை,

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் உத்தரவின் படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் ஜூன் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தீ தடுப்பு ஒத்திகை வகுப்புகள் காலை மற்றும் மாலை என ஒரு நாளைக்கு இரண்டு வகுப்புகள் நடைபெறுகிறது.

தீயணைப்பு நிலையங்கள்

இந்த வகுப்பானது வீடுகளில் சமையல் செய்யும் போது ஏற்படும் தீ விபத்து மற்றும் அலுவலகங்களில் ஏற்படும் தீவிபத்துகளை எவ்வாறு தடுப்பது மற்றும் அணைப்பது தொடர்பான வகுப்புகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் அருகில் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் மேற்கண்ட நாட்களில் பயிற்சி பெற்று பயன் பெறுமாறு தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com