தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?

தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
Published on

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தா.பழூர் அருகே கீழ மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள புனித மிக்கேல் உயர்நிலைப்பள்ளி மற்றும் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது, சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் எண்ணையினால் தீவிபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கண்டு பயன் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com