பழனி கோவில் நிலம் அபகரிக்கப்பட்டது எப்படி? - வெளியானது பத்திரம்

பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், ரூ.2 கோடிக்கு கிரையமாக அந்த நிலம் பதிவு செய்யப்பட்டது.
பழனி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம்.
Published on

பழனி,

ரூ.100 கோடி நிலமோசடி

பழனி அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது. பழனி முருகன் கோவில் நிர்வாகம், அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், ரூ.2 கோடிக்கு கிரையமாக அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அறிந்ததும் கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளர் ஜஸ் டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது முதற்கட்டமாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிபிசிஐடி விசாரணை

தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்யும் வகையில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக் கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே அந்த நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. அதோடு நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

அதன்படி. நில மோசடி தொடர்பாக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சஜிதா, துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் மற்றும் 5 மாவட்டங்களை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்திரம் வெளியானது

இந்த நிலையில், பழனி கோவில் நிலம் அபகரிக்கப்பட்டது எப்படி? என்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் தண்டபாணி மடம் தனியார் அறக்கட்டளை என குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டபாணி மடத்திற்கு சொந்தமான நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டி தர்மகாரியங்கள் செய்வது வழக்கம் என பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தினால் விற்பனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு கேட்டுள்ளதே அதிக விலை எனவும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 27-ம் தேதி கையெழுத்தான விற்பனை பத்திரம் ஜூன் 6-ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com