ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரெயிலின் சேவை காலம் நீட்டிப்பு

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயிலின் சேவை காலம் நீட்டிப்பு செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம்,
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக ராமநாதபுரம் வரை ஹூப்ளி - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ரெயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ரெயிலின் சேவை காலம் நீட்டிப்பு செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அதன்படி ஹூப்ளி-ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07355) ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி வழியாக இரவு 7.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரெயிலின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் ராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (07356) ஞாயிற்றுக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக மறுநாள் காலை 5.45 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு தர்மபுரி, ஓசூர் வழியாக இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரெயிலின் சேவை காலம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






