நிலவில் மிகப்பெரிய புதிய பள்ளம்: நாசா விண்கலம் கண்டுபிடித்தது

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய மோதல் பள்ளங்களை நிலவு கொண்டுள்ளது.
நிலவில் மிகப்பெரிய புதிய பள்ளம்: நாசா விண்கலம் கண்டுபிடித்தது
Published on

சென்னை,

132 ஆண்டுகளுக்கு ஒருமுறை..

அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவின் 'லூனார் ரீகனை சன்ஸ் ஆர்பிட்டர்' என்ற விண்கலம் நிலவின் முன்பக்கத்தில் மிகப்பெரிய பள்ளம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், 'கண்டுபிடிக்கப்பட்டுள்ள பள்ளம் சிறுகோள் அல்லது வால்நட்சத்திரத்தின் ஒரு பகுதி மோதியதால் உருவானது.

இது 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்ட செங்குத்தான பள்ளமாகும். இதன் அருகில் 7 கி.மீ. அகலமான குளிர்ச்சியான பகுதி ஒன்றும் கண்டறியப்பட்டு உள்ளது. இது நிலவின் மேல் மண் தளர்வடைந்திருப்பதை காட்டுகிறது. இத்தகைய பெரிய அளவிலான நிகழ்வு 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது.

கவலைப்பட வேண்டியதில்லை..

இந்த நிலவு மோதல் பூமியில் உள்ள தொலைநோக்கிகளுக்கோ அல்லது விண்வெளியில் உள்ள கருவிகளுக்கோ நிகழ்நேரத்தில் தெரியவில்லை. பழங்காலத்திலிருந்தே பள்ளங்களால் நிறைந்த நிலவு சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய மோதல் பள்ளங்களைக் கொண்டுள்ளது. இதில் 2,400 கிலோ மீட்டருக்கு மேல் பரந்து விரிந்த பள்ளமும் அடங்கும்.

சமீபத்திய மோதலால் நிலவின் மேற்பரப்பு 100 கிலோமீட்டருக்கு மேல் கிளறப்பட்டுள்ளது. இந்த பள்ளத்திலிருந்து வெளியேறிய பொருட்கள் நாசாவின் திட்டமிடப்பட்ட நிலவுத் தளத்தை தாக்கும் அபாயத்தைக் கணக்கிட முடியும். எனவே கட்டமைப்புகளை வலுப்படுத்த பொறியாளர்களுக்கு இது உதவும். இதனால் சேதத்தை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com