

ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் பல்வேறு கட்சி சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.
ராணிப்பேட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகரமன்ற துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட துணை செயலாளர் தமிழ், நகரமன்ற உறுப்பினர் நரேஷ், பெல் சேகர், தினகரன், வக்கீல் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜா ஒன்றிய செயலாளர் சிப்காட் சத்யன் வரவேற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் குண்டா என்கிற சார்லஸ் மனித சங்கிலியை தொடங்கி வைத்தார்.
இதில் காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், நகர தலைவர் அண்ணாதுரை மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.