மனிதசங்கிலி போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனிதசங்கிலி போராட்டம்
Published on

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் குஞ்சுபிள்ளை, செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் வேலாயுதம் வரவேற்று பேசினார். இதில் மாநில துணைத் தலைவர் பக்கிரிசாமி கலந்து கொண்டு பேசினார். ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு 4 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மாதந்தோறும் ரூ.1,000 மருத்துவப்படி வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. இதில், மாவட்ட, வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com