ஜெகதாபி கிராமத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்

ஜெகதாபி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது.
ஜெகதாபி கிராமத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்
Published on

கரூர் மாவட்டம் ஜெகதாபி கிராமத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம் மற்றும் அரசு துறை சார்பாக கண்காட்சி நடைபெறுகிறது. எனவே இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com