ரூ.89 லட்சத்து 88 ஆயிரம் உண்டியல் வசூல்

ரூ.89 லட்சத்து 88 ஆயிரம் உண்டியல் வசூலானது
ரூ.89 லட்சத்து 88 ஆயிரம் உண்டியல் வசூல்
Published on: 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் மாதம் ஒரு முறை திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று அனைத்து கோவில்களில் உண்டியல்கள் திறந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. அதில் 89 லட்சத்து 87 ஆயிரத்து 999 ரூபாயும், 404 கிராம் தங்கமும், ஒரு கிலோ 680 கிராம் வெள்ளி ஆகியவை கிடைக்க பெற்றன. கோவில் துணை கமிஷனர் அருணாசலம் தலைமையில் நடந்த இந்த பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com