பட்டின பிரவேச விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயிலில் பட்டின பிரவேச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் அமைந்துள்ளது. அந்த கேவிலில், பட்டின பிரவேசத்திற்கான பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த திருவிழாவில், மே 18-ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும், ஞானசம்பந்தர் குருபூஜையும் நடைபெறும்.இதையடுத்து, மே 20-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 21-ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, மே 22-ஆம் தேதி இரவு நடைபெறும் 11ஆம் நாள் விழாவில், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அப்பேது, தருமபுரம் ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளுகிறார். இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி, சமீபத்தில் சர்ச்சையான நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com