

சென்னை,
வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருந்தது. அது மேலும் புயல் சின்னமாக வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள குலாப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக்கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புயல் கரையைக்கடக்கும் போது 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலாப் புயல் எதிரொலியாக துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், சென்னை, நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.