தெற்கு வங்கக் கடலில் சூறாவளி காற்று - மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

தெற்கு வங்கக் கடலின் மத்திய, பூமத்திய ரேகை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் சூறாவளி காற்று - மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடு என்றும் பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இன்று முதல் வரும் 11 ஆம் தேதி வரை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்தியரேகை பகுதிகளில் 1.5 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com