காதல் திருமணம் செய்த 2 மாதங்களில் பெண் தற்கொலை - அதிர்ச்சியில் கணவரும் உயிரை மாய்த்த சோகம்

காதல் திருமணம் செய்த 2 மாதங்களில் தூக்குப்போட்டு கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த 2 மாதங்களில் பெண் தற்கொலை - அதிர்ச்சியில் கணவரும் உயிரை மாய்த்த சோகம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சமரசபாண்டி. இவருடைய மகன் பிரகாஷ்(23 வயது). இவர் பெண்களுக்கு குழுக்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். பிரகாசும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள நீடூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகள் ஹேமாவும்(21 வயது) ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் பிரகாசும், ஹேமாவும் தூங்கி கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை பிரகாஷ் கண் விழித்து பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் அவருடைய மனைவி ஹேமா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் கூச்சலிட்டார். உடனே சம்பவ இடத்துக்கு சென்ற அக்கம்பக்கத்தினர் ஹேமாவை மீட்டு கதறி அழுதனர்.

அப்போது திடீரென ஹேமா தூக்கில் தொங்கிய கயிறை எடுத்துக்கொண்டு அருகே இருந்த புளியமரத்துக்கு சென்ற பிரகாஷ் அங்கு அதே கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருத்துறைப்பூண்டி போலீசார் பிரகாஷ் மற்றும் ஹேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரகாஷ்- ஹேமா தற்கொலைக்கான காரணம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 2 மாதங்களில் தூக்குப்போட்டு கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com