மனைவியை தாக்கிய கணவர் கைது

நெல்லை அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
மனைவியை தாக்கிய கணவர் கைது
Published on

சீவலப்பேரி:

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்தவர் மாசானம் (வயது 38). இவருடைய மனைவி மாரியம்மாள் (37). மாசானம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி மாரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தகராறு ஏற்பட்டபோது மாரியம்மாளை அவரது கணவர் மாசானம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரியம்மாள் சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாசானத்தை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com