சங்கராபுரம் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது

சங்கராபுரம் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டா.
சங்கராபுரம் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள கிடங்குடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் இளவரசன் (வயது 50). வெளிநாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்துவிட்டு, கடந்த மார்ச் மாதம் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில், தான் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணம் குறித்து தனது மனைவி தவமணியிடம் கணக்கு கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அவரை இளவரசன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தவமணி அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குபதிவு செய்து இளவரசனை கைது செய்தனர். காயமடைந்த தவமணி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com