இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

மேலப்பாளையத்தில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
Published on

நெல்லை மேலப்பாளையம் பாரதியார்புரத்தை சேர்ந்தவர் காசிராஜன் (வயது 65). சமையல் தொழிலாளி. இவரின் 2-வது மனைவி பஷிரா பானு (35). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கணவன்- மனைவி 2 பேருக்கும் இடையே சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் பஷிரா பானு தூத்துக்குடியில் உள்ள அக்காள் வீட்டுக்கு சென்று விடுவாராம். நேற்று முன்தினம் தனது அக்காளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பஷிரா பானு, தனது மகனை நல்லமுறையில் பார்த்து கொள் என்று கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது பஷிரா பானு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சமாதானபுரத்தில் உள்ள பஷிரா பானுவின் மற்றொரு அக்காள் செய்யது அலி பாத்திமா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் காசிராஜன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com