

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் புதுவிடு தியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). இவரது மனைவி ஆஷா (23). இவர் களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
எம்.எஸ்சி. பட்டதாரியான ஆஷா போலீஸ் பணியில் சேர முயற்சி எடுத்து அதற்காக படித்து வந்தார். முருகேசன் 5-ம் வகுப்பு மட்டுமே படித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி ஆஷா தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் பிண மாக கிடந்தார். தனது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி கண்ணீர் விட்டு புலம்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆஷாவின் தாயார் மாரியம்மாள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ரெகுநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே ஆஷாவின் கண வர் முருகேசனின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் தனது மனைவியை அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இந்தசம்பவம் குறித்து முருகேசன் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
சம்பவத்தன்று முருகேசனுக்கும். ஆஷாவுக்கும் இடையே தக ராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் ஆஷாவை பலமாக தாக்கி உள்ளார். இதில் அவரது தலை சுவரில் பட்டு சுருண்டு விழுந்து இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் யாருக்கும் தெரியாதபடி மண் எண்ணெயை அவரது உடல் மீது ஊற்றி தீ வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு சென்று ஆஷா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள் ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, முருகேசனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.