குடும்பத் தகராறில் தாக்கியபோது மனைவி மயங்கி விழுந்ததால் கணவர் தற்கொலை

குடும்பத் தகராறில் தாக்கியபோது மனைவி மயங்கி விழுந்ததால் பயந்துபோன கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத் தகராறில் தாக்கியபோது மனைவி மயங்கி விழுந்ததால் கணவர் தற்கொலை
Published on

மாங்காடு, சீனிவாசா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர், ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுகன்யா (29). நேற்று முன்தினம் மனைவியின் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு வீட்டுக்கு சுரேஷ் மது போதையில் வந்ததாக தெரிகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதில் சுகன்யா மயங்கி விழுந்தார்.

இதனால் பயந்துபோன சுரேஷ், வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு கொண்டார். மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த சுகன்யா, தனது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார்.

அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கிய சுரேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com