மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி... விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்


மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி... விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 21 Jun 2025 9:42 AM IST (Updated: 21 Jun 2025 9:47 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயியான இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், ஜெயதுர்கா(10), ஜெயலெட்சுமி(7) என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக, சுந்தரவேலு தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்றார். இதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்ற சுந்தரவேலு, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிக்கொலை செய்ததாக கூறி சரணடைந்துள்ளார்.

இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது சுந்தரவேலுவின் மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வீட்டில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சுந்தரவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் மாவட்ட எஸ்பி கண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். குடும்பத்தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story