செல்போன் அழைப்பை எடுக்காத கணவன்: மனைவி எடுத்த விபரீத முடிவு

செல்போனில் பலமுறை அழைத்தபோதும் கணவன் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
செல்போன் அழைப்பை எடுக்காத கணவன்: மனைவி எடுத்த விபரீத முடிவு
Published on: 

சென்னை,

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

காதல் திருமணம்

இவர்களது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஆகும். வெங்கடேஷ்வரனும், ரஞ்சிதாவும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அலுவலக பணி தொடர்பாக கடந்த 23-ந்தேதி, வெங்கடேஸ்வரன் பெங்களூரு சென்றார். சம்பவத்தன்று கணவரிடம் பேசுவதற்காக ரஞ்சிதா செல்போனில் பலமுறை அழைத்தபோதும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விபரீத முடிவு

இதனால் மனவேதனை அடைந்த ரஞ்சிதா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அவரது மகள்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ரஞ்சிதா தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X