

ஒரத்தநாடு,
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர் போக்சோ சட்டத் தில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமியை அவரது தாயார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ராசாமிராசுதாரர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 13 வயது சிறுமியை ஒக்கநாடு மேலையூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராவின் கணவர் ரவிச்சந்திரன் (வயது56) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளளார்.
இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.