பெண் துப்புரவு பணியாளரை கத்தியால் வெட்டிய கணவர்

சென்னை கொடுங்கையூரில் பெண் துப்புரவு பணியாளரை கத்தியால் வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண் துப்புரவு பணியாளரை கத்தியால் வெட்டிய கணவர்
Published on

சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் சரளா (வயது 39). சென்னை மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் பாபு(44). இவரும், மாநகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளராக உள்ளார்.

கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சரளா தனது மகளுடன் வசித்து வருகிறார்.

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது தெருவில் நேற்று சரளா துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்தார். அங்கு வந்த பாபு, தனது மனைவி சரளாவிடம் தகராறு செய்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரளாவை வெட்டினார். இதில் முதுகிலும், வலது தாடையிலும் வெட்டுக்காயம் அடைந்த சரளா, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சரளா கொடுத்த புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தேடி வருகின்றனர். ஏற்கனவே பலமுறை இதுபோல் தன்னுடன் தகராறு செய்த பாபு, எனது குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் போலீசாரிடம் சரளா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com