திருமணமான 10 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், பெற்றோர் அந்த பெண்ணை அழைத்து சென்று விட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

கிருஷ்ணகிரி,

திருமணமான 10 மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பிசியோதெரபிஸ்ட்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் தயானந்தன் (28 வயது). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தங்கி இருந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், பெற்றோர் அந்த பெண்ணை அழைத்து சென்று விட்டனர்.

தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த தயானந்தன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ரவி, ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X