சென்னையில் மனைவியை கொன்று சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த கணவன்

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சென்னையில் மனைவியை கொன்று சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த கணவன்
Published on

சென்னை,

அம்பத்தூரில் கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சாரம்மாள் (25).  கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் இருந்துள்ளனர்.இந்நிலையில் இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அம்பத்தூரை சேர்ந்த ஜான்சன் என்பவரை  2 -வதாக திருமணம் செய்துள்ளார்.

சிறிது நாட்கள் சென்ற பின்னர் தான் தாம் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டுள்ளதை அவர் அறிந்துள்ளார். இதனால் சாரம்மாளை விட்டுவிட்டு அவருக்கு தெரியாமல் ஆவடியில் தனியே வீடு எடுத்து தங்கியுள்ளார்.

ஜான்சன் ஆவடியில் தங்கி இருப்பதை சாரம்மாள் எப்படியோ தெரிந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 16 ம் தேதி அவரை தேடி ஆவடிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் ஜான்சனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் கோவத்தின் உச்சிக்கு சென்றார். ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சாரம்மாளின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். சடலத்தை இரண்டு நாட்களாக வீட்டினுள்ளேயே மறைத்து வைத்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com