ஆற்காடு நகராட்சியில் தூய்மை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆற்காடு நகராட்சியில் தூய்மை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆற்காடு நகராட்சியில் தூய்மை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

ஆற்காடு

ஆற்காடு நகராட்சியில் தூய்மை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆற்காடு நகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. மக்கும் பொருட்கள், மக்காத பொருட்களை மறுசுழற்சி பொருட்கள் என தரம் பிரித்து எடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் காட்சியளிக்கப்பட்டது. மேலும் மஞ்சள் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஆணையாளர் சதீஷ்குமார், நகர மன்றத் துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com