“கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத்தின் புகழைப் போற்றுகிறேன்! - மு.க. ஸ்டாலின்

காயிதே மில்லத் கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளராவார்.
“கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத்தின் புகழைப் போற்றுகிறேன்! - மு.க. ஸ்டாலின்
Published on

சென்னை,

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்! "தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர். பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com