காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது; கமல்ஹாசன்

காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #CauveryVerdict
காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது; கமல்ஹாசன்
Published on

சென்னை,

காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்துக்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைவாக கிடைக்கும். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது; - காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது; காவிரியை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது என்பது வரவேற்கத்தக்கது.

வாக்கு வேட்டையில் காவிரி சர்ச்சையை தூண்டிவிட்டு தேசியம் மறந்து பேசுகிறார்கள். வாக்கு விளையாட்டு விளையாடுகிறேன் என்ற நோக்கில் சச்சரவை ஏற்படுத்திவிடக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு அழுத்தமாக உள்ளது சற்றே ஆறுதலாக இருக்கிறது. போராடுவது உதவாது; தீர்வு காண்பதற்காக முயற்சிப்பதே சிறந்தது. நாமெல்லாம் குரங்காக இருக்கும்போதுலிருந்து காவிரி ஓடிக்கொண்டிருந்தது. கிடைக்கும் தண்ணீரை பாசனத்திற்காக எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com