முதல்-அமைச்சரின் அதீத ஆற்றலை கண்டு வியப்படைகிறேன்: வாஷிங்டன் சுந்தர்

இருவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதல்-அமைச்சரின் அதீத ஆற்றலை கண்டு வியப்படைகிறேன்: வாஷிங்டன் சுந்தர்
Published on

சென்னை,

சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம் பிடித்திருந்தனர்.

இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அவர்கள் இருவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்-அமைச்சருக்கு அவர்கள் இந்திய அணியின் சீருடை, தொப்பியை நினைவுப் பரிசாக வழங்கினர். அவர்களுக்கு முதல்-அமைச்சர், திருவள்ளுவர் சிலையை பரிசாக அளித்தார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலினை சந்தித்தது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது,

“என் மீது பொழிந்த அன்பிற்காக நன்றி சார். உங்களின் அதீத ஆற்றலை கண்டு நான் எப்போதும் வியப்படைகிறேன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com