“புதுடெல்லி செல்கிறேன்.. எனக்காக அல்ல..” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்


“புதுடெல்லி செல்கிறேன்.. எனக்காக அல்ல..” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
x

கோப்புப்படம்

நட்புக்கு தோள் கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன்.

எனக்காக அல்ல..

என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக ..

அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..

இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல ..

நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல..

மதவெறி கும்பல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல.

நட்புக்கு தோள் கொடுப்போம்.

உரிமைக்கு குரல் கொடுப்போம் .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story